
Special Statement by the Minister of Sports Regarding Cricket
========================================
The Minister of Youth Affairs and Sports, Mr. Sunil Kumara Gamage, stated that discussions are currently underway regarding the methodology to be adopted for the rebuilding of cricket in Sri Lanka. The Minister further stated that the specific model to be implemented will be decided upon the conclusion of these discussions.
The Minister made these remarks during a special press conference held today (05th) at the Ministry. He further noted that the President has also intervened to uplift the state of cricket.
Accordingly, the Minister mentioned that relevant discussions are currently being held, with the President also participating in these deliberations.
The Minister emphasized that subsequent actions will be taken based on the agreement of the International Cricket Council (ICC). He further stated that cricket cannot be developed by risking a ban on Sri Lankan cricket; therefore, the focus remains on developing the sport while ensuring its protection.
He noted that plans for the upliftment of cricket have already been drafted, several steps have already been taken, and the upcoming plans will be implemented promptly.
The Minister said that the government has taken full responsibility for rebuilding cricket and cannot shift this responsibility onto anyone else.
Finally, the Minister made a kind request to the public to refrain from making statements that insult or disrespect the players during this time.
ක්රිකට් ක්රීඩාව සම්බන්ධයෙන් ක්රීඩා අමාත්යවරයා සිදු කළ විශේෂ ප්රකාශය
========================================
ශ්රී ලංකාවේ ක්රිකට් ක්රීඩාව ගොඩනැගීම වෙනුවෙන් අනුගමනය කළ හැකි ක්රමවේදය පිළිබඳව සාකච්ඡා සිදුකරමින් සිටින බව තරුණ කටයුතු සහ ක්රීඩා අමාත්ය සුනිල් කුමාර ගමගේ මහතා පැවසීය. එම සාකච්ඡාවලින් අනතුරුව එය සිදු කරන ආකෘතිය කුමක් ද යන්න පිළිබඳව අවධානය යොමු කරන බව ද අමාත්යවරයා ප්රකාශ කළේය.
අමාත්යවරයා මේ බව පැවසුවේ අද (05දා) අමාත්යාංශයේදී විශේෂ මාධ්ය හමුවක් කැඳවමිනි. අමාත්යවරයා විසින් වැඩිදුරටත් සඳහන් කළේ ක්රිකට් ක්රීඩාව නගා සිටුවීම සඳහා ජනාධිපතිවරයා ද මැදිහත් වී ඇති බවයි.
ඒ අනුව මේ දිනවල ඊට අදාළ සාකච්ඡා සිදු කෙරෙමින් පවතින බවත්, එම සාකච්ඡා සඳහා ද ජනාධිපතිවරයා සම්බන්ධ වන බවත් අමාත්යවරයා ප්රකාශ කළේය.
ඉන් අනතුරුව ජාත්යන්තර ක්රිකට් කවුන්සිලයේ (ICC) එකඟතාවය මත ඉදිරි කටයුතු සිදුකරන බවත්, ශ්රී ලංකාවට ක්රිකට් තහනම් කර ගනිමින් ක්රිකට් ක්රීඩාව නගා සිටුවිය නොහැකි බැවින් ක්රීඩාව ආරක්ෂා කර ගනිමින් ක්රිකට් ක්රීඩාව සංවර්ධනය කිරීම පිළිබඳව අවධානය යොමු කරන බව ද අමාත්යවරයා වැඩිදුරටත් ප්රකාශ කළේය.
ක්රිකට් ක්රීඩාව නගා සිටුවීම වෙනුවෙන් අදාළ සැලසුම් මේ වනවිටත් සකස් කර ඇති බවත්, ඊට අදාළ පියවර කිහිපයක් දැනටමත් ගෙන ඇති බවත්, ඉදිරි සැලසුම ද කඩිනමින් ක්රියාත්මක කරන බවත් අමාත්යවරයා මෙහිදී සඳහන් කළේය.
ක්රිකට් ක්රීඩාව නගා සිටුවීමේ වගකීම රජයක් ලෙස බාරගෙන ඇති බවත්, එය කිසිවෙකු මත පවරා කර ඇරිය නොහැකි බවත් අමාත්යවරයා කීවේය.
මේ මොහොතේදී ක්රීඩකයන්ට අපහාස වන ආකාරයෙන් හෝ ඔවුන්ට අගෞරව වන ආකාරයෙන් ප්රකාශ සිදුකිරීමෙන් වැළකී සිටින ලෙස ජනතාවගෙන් කාරුණිකව ඉල්ලා සිටින බවද අමාත්යවරයා වැඩිදුරටත් සඳහන් කළේය.
கிரிக்கெட் விளையாட்டுத் தொடர்பாக விளையாட்டுத்துறை அமைச்சரின் விசேட அறிவிப்பு
==========================================
இலங்கை கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்புவதற்காகப் பின்பற்றக்கூடிய நடைமுறைகள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.
இந்தக் கலந்துரையாடல்களின் பின்னர், அது எந்த மாதிரியான கட்டமைப்பில் (Model) மேற்கொள்ளப்படும் என்பது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இன்று (05ஆம் திகதி) அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக ஜனாதிபதியும் இதில் தலையிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.
இதற்கமைய, தற்போது இது தொடர்பான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதியும் கலந்துகொள்கிறார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதன் பின்னர், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) இணக்கப்பாட்டுடன் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், இலங்கைக்கு கிரிக்கெட் தடையைப் பெற்றுக்கொண்டு விளையாட்டை மேம்படுத்த முடியாது என்பதால், விளையாட்டைப் பாதுகாத்துக்கொண்டு கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வது குறித்து அவதானம் செலுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதோடு, அதற்கான சில நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
எஞ்சிய திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கிரிக்கெட் விளையாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை அரசாங்கம் என்ற ரீதியில் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அதனை எவர் மீதும் சுமத்திவிட்டு ஒதுங்கிவிட முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
இந்தத் தருணத்தில் வீரர்கள் அவமதிக்கும் வகையிலோ அல்லது அவர்களுக்குக் கௌரவக் குறைவு ஏற்படும் வகையிலோ கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அமைச்சர் தயவுடன் கேட்டுக்கொண்டார்…..
